Uncategorized

குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டம் ஆரம்பம்



குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது.

50,000 வீடுகளை நிர்மாணிக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வீடுகளின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அதிகார சபையின் தலைவர் லக்விஜய சாகர பலங்சூரிய குறிப்பிடுகின்றார்.

வருட இறுதிக்குள் 50,000 வீடுகளை நிர்மாணித்து முடிப்பதற்கு உத்தேசித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த வீடுகளுக்கான 50,000 பயனாளிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவர்களின் 25,000 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான முதற்கட்ட பணிகளை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு தொடர்ந்தும் உத்தரவாதம் அளிக்கும் பிளாக்பெரி நிறுவனம்

wpengine

மேலும் 613 பேர் கைது

wpengine

மகளை கற்பழித்து “நான் உன்னை எப்போதும் காதலிப்பேன்” எனக்கூறிய தந்தை

wpengine