உலக செய்திகள்

இந்தியாவில் சிறந்த நடிகராக மோடி – குஷ்பு புகழாரம்



பிரதமர் நரேந்திர மோடி சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, மிகச் சிறந்த நடிகர் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.

கேரள மாணவர் யூனியன் சார்பில் கோழிக்கோட்டில் நடந்த சங்கமம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், மோடி சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, இந்தியாவின் சிறந்த நடிகர். இவர் பேச மட்டும் தான் செய்கிறார், ஆனால் செயல்பாடுகள் குறைவாக உள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மௌனத்தில் இருப்பதாக குற்றம்சாட்டி வந்தவர், தற்போது தாத்ரி உட்பட பல சம்பவங்களில் மௌனத்தில் இருப்பது ஏன்?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆனால் அதன் பலனை மக்கள் அனுபவிக்கவில்லை, எண்ணெய் நிறுவனங்கள் லாபம் சம்பாதித்து வருகிறது.

நாட்டில் தற்போது தேர்தல் நடந்தால் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி எனவும் தெரிவித்துள்ளார்.

 

Related posts

பாகிஸ்தானில் வீசும் அனல் காற்றால் 141 பேர் பலி

wpengine

ரஷ்ய விமானத்தை வீழ்த்திய விதத்தை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு சான்று

wpengine

வடகொரியா மக்களுக்கு கடும் உணவுப் பஞ்சம்

wpengine