உள்நாட்டு செய்திகள்

மஹிந்த, கெஹெலியவிடம் தொடர்ந்தும் விசாரணை



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரிடம் எதிர்வரும் 17ம், 18ம் திகதிகளில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலேயே குறித்த விசாரணை நடத்தப்படவுள்ளது.

பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இன்னும், நாளையும் நாளை மறுதினமும் பொதுமக்களிடம் சாட்சியங்கள் திரட்டப்படவுள்ளன.

மேலும், கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பாரியளவில் தேர்தல் பிரச்சார விளம்பங்கள் செய்யப்பட்டு அதற்கான பெருந்தொகைக் கட்டணம் செலுத்தப்படவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும், கெஹலியவும் ஏற்கனவே இந்த விசாரணைகளில் பங்கேற்றிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்கான புதிய நிர்வாகக் குழு…

wpengine

தேர்தல் பிற்போடுவதனை என்னால் தடுக்க முடியாது..- மஹிந்த…

wpengine

சமூக ஊடக செயற்பாட்டாளர் ரெட்டா கைது

wpengine