விளையாட்டு

அஸ் ஸம்ஸ் அணியினர் 6 விக்கெட்டுகளால் வெற்றி



அஸ்-ஸம்ஸ் அணியினருக்கும்,கல்முனை டொப்ஹீரோஸ் அணியினருக்கும் இடையிலான சிநேகபூர்வ கடினபந்து கிரிக்கெட் போட்டி இன்று (2015.05.28) கல்முனை சந்தாங்கோணி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் அஸ் ஸம்ஸ் அணியினர் 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டினர்.

முதலில் துடுப்பாட்ட டொப்ஹீரோஸ் அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுக்களை இழந்து 101ஓட்டங்களை பெற்றனர்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அஸ் ஸம்ஸ் அணியினர் 4விக்கெட்டுகளை இழந்து 103 ஓட்டங்கள் பெற்று வெற்றியீட்டினர்.

இப்போட்டிக்கு பிரதம அதிதியாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கல்முனை பிராந்திய பொறியியலாளர்
ஜாபீர் சேர் அவர்கள் கலந்து கொண்டு வெற்றியீட்டிய அணிக்கு வெற்றிக்கிண்ணம் வழங்கி கெளரவித்தார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக சர்ஜுன் தெரிவுசெய்யப்பட்டார்.

Related posts

எனது உடம்பு தாங்க முடியாதளவு வேதனையினை அனுபவித்தது – அப்ரிடிக்கும் கொரோனா

wpengine

இந்தியாவினை வீழ்த்தி பாகிஸ்தானுக்கு அபார வெற்றி

wpengine

இலங்கையின் கிரிக்கெட் வீரர்களை தேசிய பயிற்சி குழுவில் இணைக்க ஒப்பந்தம்..

wpengine