உலக செய்திகள்

உலக அளவில் அதிக முஸ்லிம்கள் கொண்ட நாடாக இந்தியா



2050-ம் ஆண்டிற்குள் உலக அளவில் அதிக முஸ்லிம்கள் கொண்ட நாடாக இந்தியா மாறும் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பியு ஆராய்ச்சி மையம் இந்த கருத்தினை தெரிவித்துள்ளது. அதேபோல், 2050-ம் ஆண்டிற்குள் ஐரோப்பிய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 10 சதவீதம் இருப்பார்கள் என்று குறித்த அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தற்போதையை நிலவரப்படி உலக அளவில் அதிக முஸ்லிம்கள் வாழும் நாடாக இந்தோனேசியா உள்ளது. அதற்கு அடுத்தபடியாக முஸ்லிம்கள் அதிகம் வாழும் இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது. தற்போது 62 சதவீதம் முஸ்லிம்கள் ஆசிய-பசுபிக் பகுதிகளில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஈரான், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

இதில் பாகிஸ்தானைவிட இந்தியாவில் தான் அதிக முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சரணடைந்தார்..!

wpengine

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலின் 11வது நாளில், 750 குழந்தைகள் உட்பட 2,848 பாலஸ்தீனியர்கள் படுகொலை..!

wpengine

ஹொஸ்னி முபாரக் காலமானார்

wpengine