Uncategorized

அழியப்போகும் எவரெஸ்ட் சிகரம்



நேபாள் தலைநகர் காத்மாண்டு அருகே உள்ள கோர்கா மாவட்டத்தை மையமாக கொண்டு கடந்த 25 ஆம் திகதி ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தால் 8,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 16,390 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில், காத்மாண்டுவை ஒட்டியுள்ள இமயமலையின் எவரெஸ்ட் பகுதியில் உயரும் வெப்ப நிலை குறித்து விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில், நேபாளம், பிரான்ஸ், நெதர்லாந்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆய்வு குறித்து சர்வதேச அறிவியல் இதழான தி “க்ரையோஸ்பியரில்” விஞ்ஞானி ஜோசப் ஷியா, வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது, 2100ல் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் எவரெஸ்ட் சிகரத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்படும்.

எவரெஸ்ட் பகுதியில் பனிப்பாறைகள் குறைந்தது 70 சதவிகிதம் மறைந்து விடும்.

பனிப்பாறைகள் உருகும், வெள்ள அபாயத்தால் வாழ்வினங்கள் பாதிக்கப்படும்.

மேலும் உருகும் பனிப்பாறைகள் நேபாளத்திற்கு குடிநீர் வழங்கும் தூத் கோசி ஆற்றில் நிரம்பும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Related posts

யாழ். மாநகர சபைக்கு வழங்கிய நிதியை மீள கோரும் ஜப்பான்!

wpengine

திங்கள் முதல் தே.அ.அட்டையின் இலக்க முறைமை நடைமுறைக்கு

wpengine

Game பிரியர்களை கலக்க வருகிறது Angry Birds 2

wpengine