ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

விஷாலுக்காக காத்திருக்கும் பாண்டிராஜ்



பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ‘கதகளி’. பொங்கல் தினத்தில் இதை திரையிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கிராமத்து பங்காளிகள் கதை. இந்த படத்தில் சூரியின் காமெடி முக்கிய அம்சமாக இடம்பெறுகிறது. விஷாலும் இவருடன் சேர்ந்து காமெடி செய்து இருக்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன.

சமீபத்தில் ‘கதகளி’ படத்துக்கான ‘டப்பிங்’ வேலைகள் தொடங்கின. இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் டப்பிங் பேசி முடித்து விட்டனர். ஆனால் விஷால் டப்பிங் பேச முடியவில்லை.

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் சங்கம் சார்பிலும், நண்பர்கள் குழு சார்பிலும் செய்யப்படும் உதவிகளை விஷால் முன்னின்று வழங்கி வருகிறார். கடந்த சில தினங்களாக வெள்ள நிவாரண உதவி வழங்குவதில் தீவிரமாக ஈடுபட்டதால் விஷால் டப்பிங் பேச வரவில்லை.

இதற்கிடையே ராஜபாளையத்தில் நடைபெறும் ‘மருது’ படப்பிடிப்பிலும் விஷால் கலந்து கொள்ள வேண்டியுள்ளது. ‘கதகளி’ படத்தில் விஷால் ‘டப்பிங்’ பேசிவிட்டால் பின்னணி இசை சேர்க்கும் பணியை தொடங்கி விடலாம். பொங்கலுக்கு படத்தை ‘ரிலீஸ்’ செய்து விடலாம் என்று படக்குழுவினர் கருதுகிறார்கள்.

எனவே விஷால் டப்பிங் பேச வரும் நாளுக்காக இயக்குனர் பாண்டிராஜ் காத்திருக்கிறார்.

Related posts

பாதுகாப்பு நிமித்தமாக Blackberry Phone பாவிக்க ஒபாமாவிற்கு தடையாம் ..

wpengine

கிரிக்கெட் வீரரிடம் வித்தியாசமாக தன் காதலை வெளிப்படுத்திய பாகிஸ்தான் பிரபல நடிகை

wpengine

உத்தமன் என்று எவனுமில்லை அரசியல் என்னும் சதுரங்கப் பலகையில்

wpengine