ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

காவலாளி சடலமாக மீட்பு


திருகோணமலை பட்டணம் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விலாங்குளம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை காவலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

பட்டணம் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான அருணாச்சலம் டேவிட் (வயது 57) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், நேற்று திங்கட்கிழமை மாலை அலுவலகத்துக்கு விளக்கேற்றி விட்டு வருவதாக கூறிச் சென்றவர் இரவு வரை வீடு திரும்பாததையடுத்து, அவருடைய மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், திணைக்களத்தின் காவலாளி அறையிலிருந்து குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்

Related posts

TNL தொலைக்காட்சி அலைவரிசை இடைநிறுத்தம்….

wpengine

இந்தோனேசியாவில் மலர்ந்துள்ள உலகின் மிகபெரிய மலர்.

wpengine

மாலிங்க பாகிஸ்தான் செல்ல மறுப்புக்கு விராட் கோஹ்லி ஆதரவு

wpengine