ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – விஜயகலா மகேஸ்வரன்.



பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வித்தியா, சேயா கொலைச் சம்பவங்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். பெற்றோரை இழந்த பிள்ளைகள் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் வாழ்ந்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியர் வடக்கில் இருக்கின்றார்கள் எனவும் அவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Related posts

உயிரை பணயம் வைத்து போராடுகிறேன் – மைத்திரி…

wpengine

சர்ச்சைக்குள்ளான கிரிக்கெட் காணொளி வெளியீட்டுக்கும் அணிக்கும் தொடர்பு இல்லை – விசாரணைகள் ஆரம்பம்…

wpengine

ஞானசார தேரருக்கு நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

wpengine