உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவன்ட் கார்ட் சில ஊடகவியலாளர்களுக்கு லஞ்சம் வழங்கியுள்ளது – அநுர



அவன்ட் கார்ட் நிறுவனத்திடமிருந்து சில ஊடகவியலாளர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

தமது தொழில் ஒழுக்க விதிகளை மீறி இந்த குறித்த ஊடகவியலாளர்கள் பணம் பெற்றுக் கொண்டு, அவன்ட் கார்ட் நிறுவனத்திற்காக குரல் கொடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பெரும் எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள் தொழில் ஒழுக்கவிதிகளை உரிய முறையில் பின்பற்றுவதுடன் சிலர் அவற்றை பின்பற்றுவதில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இணைய மற்றும் அச்சு ஊடகங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பணம் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சில பத்திரிகைகளும் இணைய ஊடகங்களும் அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு சார்பாக தகவல்களை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சில ஊடகங்களைத் தவிர பல ஊடகங்கள் அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு சார்பாகவே தகவல்களை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

 

Related posts

சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க உதவுமாறு பிரதமர் கோரிக்கை…

wpengine

கடற்படை வீரர்கள் இருவருக்கும் விளக்கமறியல்

wpengine

மிருகக்காட்சிசாலைகள் மீள் அறிவித்தல் வரை பூட்டு

wpengine