உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இலங்கையில் கடற்பரப்பில் மிதக்கும் சடலங்கள் சென்னை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டோர் – கடற்படை



இலங்கையின் திருகோணமலை கடல் பகுதியில் சில உடல்கள் மிதப்பதாகவும் அவை சென்னை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களாக இருக்க கூடும் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை கடலில் 6 சடலங்கள் மிதப்பதாக திருகோணமலை மீனவர்கள் காவல்துறையினரிடம் தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து இலங்கை கடற்படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது ஒரு ஆண் சடலத்தை கண்டுபிடித்தனர்.

அந்த ஆணின் சடலத்திலிருந்து எடுக்கப்பட்ட அடையாள அட்டை, சென்னையை சேர்ந்த கால் டாக்சி ஓட்டுநரின் அடையாள அட்டை எனத் தெரிய வந்தது. இலங்கை கடற்பகுதியில் மேலும் சடலங்கள் மிதக்கின்றனவா? என இரண்டாவது நாளாக அந்நாட்டு கடற்படையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர்களின் உடல்கள் இலங்கையில் கரை ஒதுங்கியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

உணவுப் பாதுகாப்பு பட்டியலில் இலங்கைக்கு 66 ஆவது இடம்…

wpengine

பங்குச்சந்தை நடவடிக்கைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பம்

wpengine

செலுத்தப்படாத மின்கட்டணம் தொடர்பில் நாமல் பதில் கடிதம்..!

wpengine