ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

உக்குவா கொலை: ஆமி அமில கைது


தங்கல்ல பள்ளிக்குடாவ பிரதேசத்தில் உக்குவா எனும் நபர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த ஆமி அமில எனும் நபர், புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பள்ளிக்குடா உக்குவா ஹேவத் ஜயவீர படபெதிகே பிரசன்ன இந்திக அல்லது உக்குவா என்று அழைக்கப்படும் நபரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவத்தில் ஆமி அமில எனப்படும் நிரோஷன ராஜபக்ஷ எனும் நபரை பொலிஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில், ஆமி அமில தங்கல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் சந்தேகநபரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் துப்பாக்கி ரவைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 26ஆம் திகதி தங்கல்ல பள்ளிக்குடா பிரதேசத்தில் உக்குவா எனும் நபர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

Related posts

விரைவில் அமைச்சரவை மாற்றம், ஊடக அமைச்சு காலிக்கா..?

wpengine

புத்தாண்டை முன்னிட்டு வாகனம் செலுத்துவோருக்கு விசேட அறிவித்தல்…

wpengine

இராணுவப் படையினருக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை..

wpengine