Top Story 1உள்நாட்டு செய்திகள்

சட்டமூலம் ஒன்று தொடர்பில் சபாநாயகர் விசேட அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (20) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

அதற்கமையம், முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த பின்னர், சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தீர்மானிப்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை என உயர் நீதிமன்றம் கருதுவதாக உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதுடன் அதன்படி, மனுதாரர் இந்த மனுவை மீளப் பெறுவதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மனுவை மீளப்பெறுவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து, மனு தொடர்பான எதிர்வரும் நடவடிக்கைகளை முடிவுறுத்தி அதனைத் தள்ளுபடி செய்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

Related posts

பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்…

wpengine

இரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..

wpengine

விண்ணப்பிக்கும் கால எல்லை நாளையுடன் நிறைவு

wpengine