Top Story 2உள்நாட்டு செய்திகள்

நெவில் சில்வாவுக்கு பிணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த கொழும்பு குற்றவியல் பிரிவின் முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம W15 ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நெவில் சில்வா இன்று (24) நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 8 சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மாத்தறை நீதவான் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார்.

அதற்கமைய, குறித்த வழக்கின் 9ஆவது சந்தேகநபரான நெவில் சில்வா இன்று (24) நீதிமன்றில் சரணடைந்ததைத் தொடர்ந்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related posts

PHI தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு

wpengine

பயணசீட்டிற்கான பணத்தை மீள செலுத்த தீர்மானம்…

wpengine

வாசகர்களுக்கு இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்

wpengine