Top Story 2உள்நாட்டு செய்திகள்

கெப் மற்றும் லொறி மீது பேருந்து மோதி கோர விபத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அக்போபுர பொலிஸ் பிரிவின் கந்தளாய் – திருகோணமலை வீதியில் 85 ஆம் தூண் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அக்போபுரவிலிருந்து கந்தளாய் நோக்கிச் சென்ற கெப் வண்டியொன்றின் மீது, அதே திசையில் பயணித்த பேருந்து ஒன்று பின்னால் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், பின்னர் பேருந்து எதிர் திசையில் இருந்து வந்த லொறி ஒன்றின் மீதும் மோதியுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தின் சாரதி உட்பட  20 பேர் காயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பேருந்து சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தவர் மாவனெல்ல பகுதியைச் சேர்ந்தவராவார்.

Related posts

எதிர்வரும் அரசியல் குறித்து கலந்துரையாட ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழு கூடுகிறது…

wpengine

உணவுப் பற்றாக்குறையால் பெருந்தோட்ட மக்களே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்!

News Editor

நாட்டை உலுக்கிய விபத்துக்கான காரணம் வௌியானது!

wpengine