Top Story 3உள்நாட்டு செய்திகள்

கிழக்கு பல்கலை உபவேந்தர் கடத்தல் தொடர்பாகவே பிள்ளையான் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை குற்றப்புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து நேற்று (08) இரவு பிள்ளையான் கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ம் திகதி உபவேந்தர் பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில், அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மேலும் 21 பேர் பூரண குணமடைந்தனர்

wpengine

“ஒற்றுமையின் மூலம் சமூகத்திற்கெதிரான சதிகளை முறியடிப்போம்” மாவடிப்பள்ளியில் அமைச்சர் ரிஷாட்!

wpengine

நாம் 9.4 மில்லியனுக்கு ஹில்டனில் சாப்பிடவில்லை – மறுக்குறார் மஹிந்த

wpengine