Top Story 3

ஹிக்கடுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹிக்கடுவ – குமாரகந்த பகுதியில் இன்று (03) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரவு 7 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் பலத்த காயமடைந்த கணவன், மனைவி இருவரும் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 51 வயதுடைய கணவன்  சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீதிக்கு அருகில் உள்ள ஒரு கடையில் காத்திருந்த தம்பதியை இலக்கு வைத்து மேற்படி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

முஸ்லிம் பாடசாலை மாணவியை கடத்திய மர்ம நபர்கள்

Azeem Kilabdeen

முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச ஜனாதிபதி இதயசுத்தியுடன் அழைத்தால், அதில் பங்கேற்பதற்கு தயார்!

wpengine

நேற்று 668 கொவிட் தொற்றாளர்கள் பதிவு

wpengine