Top Story 1உள்நாட்டு செய்திகள்

ACMC பிரதேச அமைப்பாளர் பதவிலிருந்து அமீர் இடைநிறுத்தம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான அமைப்பாளர் பதவிலிருந்தும், கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் ஏ.கே அமீர் தற்காலியமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் எஸ். சுபைர்தீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலின் போது, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துபோட்டியிடும் நிலையில், கட்சியின் அமைப்பாளராக செயற்பட்ட ஏ.கே. அமீர் கட்சியின் தீர்மானத்தை மீறி, சுயேற்சைக்குழுவொன்றின் வேட்பாளராக வேட்புமனுவை தாக்கல் செய்தமையின் காரணமாக அவர் அமைப்பாளர் பதவியிலிருந்தும், கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் தற்காலியமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

மேலும், அவருக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் விரைவில் நடைபெறும் எனவும் செயலாளர் நாயகம் எஸ். சுபைர்தீன் தெரிவித்தார்.

Related posts

ரஷ்யாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனம் இலங்கைக்கான சேவையை ஆரம்பித்தது..!

wpengine

மேலும் 5 இலட்சம் டோஸ்கள் இலங்கைக்கு

wpengine

முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்…

wpengine