Top Story 2உள்நாட்டு செய்திகள்

2024 O/L பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாளை (17) ஆரம்பமாகும் 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 3,663 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் இந்தப் பரீட்சையில் 474,147 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

பரீட்சை ஆரம்பமாவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பரீட்சையில் முறைகேடுகளைக் குறைப்பதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.

Related posts

மதுஷ் மற்றும் அங்கொட லொக்காவின் நெருங்கிய சகாக்கள் 04வர் கைது…

wpengine

ஊரடங்கு நீடிக்கப்படுமா?

wpengine

MT New Diamond : கெப்டனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

wpengine