Top Story 1உலக செய்திகள்

கிணற்றில் விழுந்து நபரொருவர் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கல்னேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெலபதுகம பகுதியில் வயல் நிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கல்னேவ பொலிஸார் தெரிவித்தனர்.

கல்னேவ பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (23) மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் தற்போது விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர் ஹெலபதுகம, கல்னேவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய விசாரணையில், இந்த நபர் சுமார் மூன்று நாட்களுக்கு முன்பு கிணற்றில் விழுந்திருப்பது தெரியவந்துள்ளது.

சடலம் அனுராதபுரம் மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கல்னேவ பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் 05 பேர் உயிரிழப்பு

wpengine

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மக்கள் போராட்டம்

wpengine

‘குவாட்’ நாடுகளின் உறுதியுடன்  100 கோடி கொரோனா தடுப்பூசிகள்

wpengine