Top Story 2உள்நாட்டு செய்திகள்

மின்வெட்டு குறித்து சஜித்தின் X பதிவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மின்வெட்டுக்கு முதலில் ஒரு குரங்கு மீது பழி சுமத்திய அரசாங்கம், பின்னர் அதனை கடந்த அரசாங்கங்கள் மீது சுமத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது X கணக்கில் பதிவொன்றை இட்டு இதனை தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தற்போதைய அரசாங்கம் உண்மையான பிரச்சினை என்ன என்பதை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்கத் தவறியதும், குறைந்த தேவை காலங்களை நிர்வகிக்காத பலவீனமான நிர்வாகமும் மின் தடைக்கு முக்கிய காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

தபால் ஊழியர்கள் நாளை தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானம்…

wpengine

மஹிந்தவை அழைப்பது தொடர்பில் ஹிருணிகா தடுமாற்றம்

wpengine

அரசின் புதிய வரிச் சட்டத்திற்கு எதிராக பந்துல குணவர்தன வழக்கு..

wpengine