விளையாட்டு

தரவரிசையில் அஸ்வின் 2வது இடம், பின்தள்ளப்பட்டார் டிவில்லியர்ஸ்



டெஸ்ட் போட்டிகளில் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

இதில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்திய அஸ்வின் முதன்முறையாக 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அதேபோல் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி இருந்தாலும் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய் முதலிடத்தில் தொடர்கிறார்.

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் பாகிஸ்தான் சுழற்பந்து வீரர் யாசிர் ஷா தலா 846 புள்ளிகளுடன் 3வது இடத்திலுள்ளனர்.

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 5வது இடத்தையும், அவுஸ்திரேலிய வீரர் ஹசில்வுட் 10வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்திய வீரர்களில் அமித் மிஸ்ரா 2 இடங்கள் முன்னேறி, 31வது இடத்திலும், ஜடேஜா ஒரு இடம் முன்னேறி 11வது இடத்திலும் உள்ளனர்.

துடுப்பாட்ட தரவரிசையில், அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகிய இருவரும் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

டிவில்லியர்ஸ் முதலிடத்தை தவறவிட்டுள்ளார். அவர் 2 இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 3வது இடத்தில் உள்ளார்.

இந்திய வீரர்களில் முரளி விஜய் தொடர்ந்து 12வது இடத்திலும், புஜாரா ஒரு இடம் பின்தங்கி 15வது இடத்திலும், விராட் கோஹ்லி ஒரு இடம் முன்னேறி 16வது இடத்திலும் உள்ளனர்.

 

Related posts

இலங்கையுடன் டெஸ்ட்டில் மோதும் பங்களாதேஷ் அணியினர் விபரம்..

wpengine

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணி விவரம்

wpengine

பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி இனை சந்தித்தார் குட்டி மெஸ்ஸி..(Photos)

wpengine