விளையாட்டு

ICC தரவரிசையில் மூன்றாம் இடம் பிடித்த மஹீஷ் தீக்ஷன



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஐ.சி.சி ஆடவர் ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

7வது இடத்திலிருந்த தீக்ஷன 4 இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார்.

663 மதிப்பீட்டு புள்ளிகளுடன், ஐ.சி.சி தரவரிசையில் தீக்ஷன அடைந்த மிக உயர்ந்த நிலை இதுவாகும்.

தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் முதலிடத்திலும், இந்தியாவின் குல்தீப் யாதவ் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதி இரண்டு போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் இவ்வாறு தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

T20 WORLD CUP : இலங்கையை வீழ்த்தியது ஆஸி

wpengine

15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அபார வெற்றி

wpengine

கொரோனா ஆய்வு உபகரணம்; இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நிதிஉதவி

wpengine