உள்நாட்டு செய்திகள்

சீனா பயணித்தார் ஜனாதிபதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (13) இரவு சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் லீ சங் (Li Qiang) மற்றும் இராஜதந்திரிகளை சந்திக்க உள்ளார்.

அத்தோடு இந்த  விஜயத்தின் போது, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட துறைசார்  பல கள விஜயங்களிலும்   ஜனாதிபதி  பங்கேற்க உள்ளதோடு பல உயர் மட்ட வர்த்தகக் கூட்டங்களிலும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன.

ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தினமும் 543 கோடி ரூபா கடன் பெறும் அரசாங்கம், நாளாந்தச் செலவு எவ்வளவு தெரியுமா..?

wpengine

நுவரெலியா மாவட்டத்தின் இரு சுகாதார பிரிவுகள் முடக்கம்

wpengine

ஜனாதிபதி வேட்பாளர்கள் மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை வழங்க வேண்டும்

wpengine