Top Story 3

முஸ்லிம் பாடசாலை மாணவியை கடத்திய மர்ம நபர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு)

கண்டி மாவட்டம், கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பரப்பொல பகுதியில் நேற்று (11) சனிக்கிழமை பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

பாடசாலை மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக வேனில் கடத்தி செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிரிவி காணொளிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு மாணவிகள் பிரதான வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு சிறிய கறுப்பு நிற வேனில் வந்த குழுவினர், அந்த மாணவிகளில் ஒருவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர்.

இதனைக் கண்டு யந்துபோன மற்றொரு மாணவி அங்கிருந்து ஓடியுள்ளார். இந்நிலையில் கடத்தப்பட்ட மாணவியைக் காப்பாற்றுவதற்கு நபரொருவர் முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை.

கடத்தலுடன் தொடர்புடைய வேன் பொலன்னறுவை நகரில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த வாகனம் வாடகைக்கு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கடத்தப்பட்ட மாணவி மற்றும் கடத்தலை மேற்கொண்ட நபர் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. எவ்வாறாயினும், கடத்தலில் ஈடுபட்ட நபர் கடத்தப்பட்ட மாணவியின் உறவினர் என்பது தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மாணவியின் உறவினர்களால் தவுலகல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடத்திச் சென்றவர்களை கைது செய்வதற்கு விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு பிணை இல்லை

wpengine

பிரதமருடன் விஷேட கலந்துரையாடல்

wpengine

டின் மீன் மீதான VAT வரியை குறைக்குமாறு கோரிக்கை

Azeem Kilabdeen