உள்நாட்டு செய்திகள்

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு நீக்கம்


(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஊடகவியலாளரான சமுதித சமரவிக்ரமவுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் கோட்டாபயவுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியின் போது, பொதுமக்களுக்கு ஆதரவாக செயற்பட்ட காரணத்தினால் சமுதித சமரவிக்கிரவை அச்சுறுத்தும் வகையில் சமுதிதவின் வீட்டுக்கு மனிதக் கழிவுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது

இதனையடுத்து ரணிலின் ஆட்சிக்காலத்தில் சமுதிதவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது அக்காலத்தில் சமுதித்தவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதாது என்றும், அவரைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை என்றும் இன்றைய ஜனாதிபதி அநுரகுமார விஜித ஹேரத் உள்ளிட்டோரும் குரல் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் சமுதிதவுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு தினம் நீக்கப்பட்டுள்ளது. இது ஊடக சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தலின் ஆரம்பம் என்று சமுதித சமரவிக்ரம குறிப்பிட்டுள்ளார்

Related posts

கோட்டாபயவுக்கு பிரதமர் பதவி? நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை!

wpengine

அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமரால் பதவி விலக முடியாது!

wpengine

டின் மீன்களுக்கு சில்லறை விலை

wpengine