உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பதவி விலகினாலும் அவன்ட் கார்ட் சர்ச்சைக்கு தீர்வு கிட்டவில்லை – மாரப்பன்ன



பதவி விலகிய போதிலும் அவன்ட் கார்ட் பிரச்சினைக்கு இற்றை வரை தீர்வு கிடைக்கவில்லை என முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சட்டவிரோதமானது எனக் கூறப்படும் ஆயுதங்களை கடற்படையினரிடம் ஒப்படைக்க முடியுமா என்ற சர்ச்சைக்கு இன்னமும் ஒழுங்கான தீர்வு எட்டப்படவில்லை.

இன்னும், குறித்த அவன்ட் கார்ட் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக அரசாங்கம் கூறிய போதிலும் அதன் ஊடாக நான் பதவியிழந்தது மட்டுமே நடைபெற்றுள்ளது.

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் பணிகள் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட உடனேயே பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டாது. அவன்ட் கார்ட் சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனைப் புரிந்து செயற்பட வேண்டும்.

அவன்ட் கார்ட் நிறுவனம் தொடர்பில் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட பகைமையின் அடிப்படையிலேயே கருத்து வெளியிட்டு வருகின்றனர் என நாடாளுமன்ற திலக் மாரப்பன மேலும் தெரிவித்துள்ளார்.

 

Related posts

நம்பிக்கையில்லாப் பிரேரணையினை தோற்கடிக்க ஐ.தே.கட்சி தீர்மானம்…

wpengine

மஹிந்த தலைமையில் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் மனித உரிமை தொடர்பில் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்..

wpengine

விவசாயிகள் சம்மேளனம் அரிசி இறக்குமதிக்கு கடும் எதிர்ப்பு

wpengine