Top Story 1சூடான செய்திகள்

உழவு வண்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் – அதிபர் மற்றும் ஆசிரியர் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அம்பாறையில் உழவு வண்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதான மதரசா பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியரை டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், உழவு இயந்திரத்தின் உதவியாளர்கள் இருவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை – காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், மதரசா பாடசாலையின் அதிபர், ஆசிரியர் மற்றும் உழவு இயந்திரத்தின் உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் இருவருக்குப் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

மங்களவின் குற்றச்சாட்டை நிராகரிக்கிறார் கோத்தபாய ராஜபக்ஷ..

wpengine

சமகால அரசியலில் குளிர்காய நினைக்கும் அனுரவினை காட்டிக்கொடுக்குமா தாஜுதீன் CCTV பதிவுகள்..

wpengine

ஜப்பானிடமிருந்தும் 38 பில்லியன் யென் அபிவிருத்திக் கடன் உதவி

wpengine