ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

யாழ் சொகுசு பஸ்ஸில் இருந்து 7 கிலோ கஞ்சா



யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ்ஸில் இருந்து 7 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் மேலும் 5 கிலோ கஞ்சாவுடன் ஐவரைக் யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று (2015-11-29)  கைதுசெய்துள்ளனர்.

யாழ். நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் சொகுசு பஸ்ஸில் ஏறியுள்ளனர்.

இருவரிடமும் பாரிய பொதி ஒன்று இருப்பதைக் கண்ட பஸ் நடத்துனர் பொதியை தருமாறும், பின் டிக்கிக்குள் வைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

நடந்துனரிடம் பொதியை கொடுப்பதற்கு இருவரும் மறுத்ததுடன் பின்னர் பருத்தித்துறையில் இருந்து கொழும்பு சென்ற பஸ்ஸில் ஏறியுள்ளனர்.

இருவரின் செயற்பாடுகளில் சந்தேகமுற்ற பஸ் நடத்துனர், பருத்தித்துறை பஸ் உரிமையாளருடன் தொடர்பு கொண்டு, சம்பவம் பற்றி தெரிவித்துள்ளார்.

குறித்த பஸ் உரிமையாளர் உடனடியாக பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் இருவரும் கைதுசெய்யப்பட்டு, யாழ். பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பின்னர் சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் படி, பருத்தித்துறை பகுதியில் மேலதிகமாக 5 கிலோ கஞ்சாவினை மீட்டதுடன், ஐவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் தற்போது, யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, இவரகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

காலி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் களேபரம்

wpengine

கொழும்பு – கோட்டை முதல் யூனியன் பிளேஸ் வரையில் படகு சேவை

wpengine

ஊழல் மோசடியில் பதவி விலகிய ரவிக்கு அரசிடமிருந்து மற்றுமொரு விசேட பதவி..

wpengine