Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முருங்கைக்காய் ஒரு கிலோ 2000 ரூபா..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை நேற்று 2000 ரூபாவாகவும் மொத்த விலை 1980 ரூபாவாக பதிவாகியிருந்தது.

நாட்டில் உள்ள வேறு எந்த ஒரு பொருளாதார மையத்திலும் நேற்று முருங்கை விற்பனை செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெகொட விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய் மொத்த விற்பனை விலை 1000 ரூபாவிற்கு மேல் இருந்தது.

இதேவேளை. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2,000 ரூபாவுக்கு மேல் இருந்த ஒரு கிலோ கேரட்டின் மொத்த விலை 650 ரூபாவாக குறைந்துள்ளதாக நேற்று நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

பிரதியமைச்சர் பாலித உட்பட இருவர் கைது

wpengine

பானாமா ஆவணம் குறித்து விளக்கம் அளிக்க இரண்டு வார கால அவகாசம் – நிதி அமைச்சர்

wpengine

பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு…

wpengine