உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

செங்கடல் மோதலினால் இலாபமீட்டும் இலங்கை..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் செயற்பாட்டு பணிப்பாளர் யு.குமார தெரிவித்துள்ளார்.

செங்கடலை அண்மித்த பகுதியில் ஏற்பட்டுள்ள மோதல் சூழ்நிலை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடத்தின் கடந்த 29 நாட்களில் 330 க்கும் மேற்பட்ட கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் நடவடிக்கைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த 29 நாட்களில் துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான கொள்கலன் நடவடிக்கைகளின் கொள்ளளவு கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 60.9% அதிகரித்துள்ளதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

டில்ஷான் vs திசர பங்கேற்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியின் இறுதிப் போட்டி இன்று…

wpengine

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி.யின் கார் மீது மோதி பெண் ஒருவர் பலி

wpengine

SLBC தலைவர் தன்னிச்சையாக செயற்படுகிறார் – சபாநாயகர்..

wpengine