வணிகம்

“நேச்சர்ஸ் சீக்ரட்ஸ்” விற்பனை பிரதிநிதிகளுக்கான விருது விழா



இலங்கையின் முதற்தர மூலிகை அழகுசாதன வர்த்தக உற்பத்தி நாமமாய் திகழும் ”நேச்சர்ஸ் சீக்ரட்ஸ்” உற்பத்திகளை தயாரிக்கும் நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின், விற்பனை பிரதிநிதிகளின் வருடாந்த விருது விழா மற்றும் மாநாடு, அண்மையில் மிக கோலாகலமாக நடைபெற்றது.

நாடளாவிய ரீதியாக 100 இற்கும் மேற்பட்ட விற்பனை பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நேச்சர்ஸ் சீக்ரட்ஸ் நிறுவனத்தின் தலைவர் / முகாமைத்துவ பணிப்பாளர் சமந்தகுமாரசிங்க தலைமையில் நடைபெற்ற இவ்விருது வழங்கும் விழாவில் நேச்சர்ஸ் சீக்ரட்ஸின் வர்த்தக நடவடிக்கைகள் மீளாய்வு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்தாண்டு சிறப்பாக செயற்பட்ட விற்பனை பிரதிநிதிகளுக்கான விருதுகள், சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களும் வழங்கப்பட்டன.

வருடத்தின் சிறந்தவிற்பனை பிரதிநிதிகளுக்கான ”சைனிங் ஸ்டார்” (Shining star) விருது உட்பட பலவிருதுகள் வழங்கப்பட்டதுடன் அந்த அத்தனை விருதுகளையும் கொழும்பு தவிர்ந்த வெளிமாவட்டத்தை சேர்ந்த விற்பனை பிரதிநிதிகள் வென்றெடுத்தமை இங்கு விசேட அம்சமாகும்.

இதேவேளை பெண்டா பேபி உற்பத்திகளை அதிகம் விற்பனை செய்த பிரதிநிதிகள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Related posts

தேயிலை இலைகளை இரவு 8.30 மணிக்கு முன்னதாக ஒப்படைக்கவும்…

wpengine

தீபாவளியை முன்னிட்டு 15,000 ரூபாய் வீதம் முற்பணம் வழங்க அனுமதி

wpengine

‘Vega’ டிஜிட்டல் விருது வழங்கும் நிகழ்வில் HNB Financeக்கு மதிப்பளிப்பு

wpengine