Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சிகிரியா கிபிஸ்ஸ பிரதேசத்தில் நெல்லை உட்கொண்ட காட்டு யானை சுவரை சேதப்படுத்தியதில், சுவர் இடிந்து வீழ்ந்து இளைஞர் பலி..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சிகிரியா கிபிஸ்ஸ பிரதேசத்தில் நண்பர் ஒருவரின் வீட்டில் இளைஞர்கள் குழுவுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது காட்டு யானை சுவரை சேதப்படுத்தியதில் அது இடிந்து வீழ்ந்து 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சீகிரிய கிபிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த அவிந்த இஷான் சமரநாயக்க என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இவர் சிகிரியா பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் ஹோட்டல் முகாமைத்துவ பயிற்சி பெறுபவர் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

நெல்லை உண்ண வந்த காட்டு யானை அதனை உட்கொண்டு விட்டு இளைஞர்கள் உறங்கிக் கொண்டிருந்த வீட்டின் சுவரை சேதப்படுத்தியபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

ஐ.நா அலுவலகத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் கடிதம் கையளிப்பு

wpengine

கல்வியல் கல்லூரிகளுக்கான நேர்முகப் பரீட்சை – ஜுன் மாதம்

wpengine

நெடுந்தூர பேரூந்து சேவைகள் இரத்து

wpengine