உலக செய்திகள்சூடான செய்திகள்

பப்புவா நியூ கினியாவில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பப்புவா நியூ கினியாவின் வடக்கு கடற்கரையில் இன்று 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருப்பினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

பசிபிக் தீவு மாநிலத்தின் கிழக்கு செபிக் மாகாணத்தின் தலைநகரான வெகாக் நகரத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ள கடற்கரையிலிருந்து 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

காலை 8:46 மணிக்கு 12 கிலோமீட்டர் (ஏழு மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் கண்டறியப்பட்டதாக யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக ‘சுனாமி அச்சுறுத்தல் இல்லை’ என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் ஒரு தனி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

 

 

Related posts

அமெரிக்காவுக்கு வரும் கியூபா மக்களுக்கு ஓராண்டில் குடியுரிமை வழங்க ஒபாமா அறிவிப்பு…

wpengine

சுமார் 72 பயணிகள் பயணித்த விமானம் விபத்து.. (PHOTOS)

wpengine

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதியை தாக்கி கொன்ற சக கைதிகள்..!

wpengine