உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

டிக்கெட் இல்லாமல் பேருந்தில் சென்றால், ரூ. 250 முதல் ரூ. 3,000 அபராதம் விதிக்கப்படும்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதற்கான அபராதத்தை மூவாயிரம் ரூபாவாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனால், டிக்கெட் எடுக்காமல் பிடிபடுபவர்கள், மூவாயிரம் ரூபாய் அபராதத்துடன், இரு மடங்கு கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது.

பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதால் நாளாந்தம் சுமார் 70 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அடுத்த வருடம் இந்த சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.

தற்போது, ​​பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தால், 250 ரூபாய் அபராதமும், இரண்டு மடங்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

Related posts

நல்லாட்சி அரசு குறித்து விசனம், அரசுக்கட்சி உறுப்பினர் எதிர்க்கட்சி ஆசனத்தில்..?

wpengine

யாழ்.மாணவி கொலை – கணவனுக்கு விளக்கமறியல்

wpengine

கொழும்பு துறைமுகத்திட்ட விவகரம் ஜனவரி 6ல் உயர்மட்டக்கூட்டம்

wpengine