உள்நாட்டு செய்திகள்

வவுனியாவில் ஒருவர் வெட்டிக்கொலை



வவுனியா பகுதியில் ஒருவர் கோடாரியால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு 9.55 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த 55 வயதான நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்கேகநபர் தற்போது கைது  செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரால் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் வவுனியா நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

குறித்த இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

விஜயகலாவின் கருத்து தொடர்பில் ஆராய ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மூவர் கொண்ட குழு நியமனம்…

wpengine

கையடக்கத் தொலைபேசி கட்டணங்கள் தொடர்பான அறிவித்தல்!

Azeem Kilabdeen

நாடு திரும்பினார் பிரதமர்…

wpengine