உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

யாழில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர்..!

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு தனது பாரியாருடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்துள்ள சந்தோஷ் நாராயணன் , மாலை யாழ்ப்பாணத்தை சேர்ந்த கலைஞர்களை யாழில் உள்ள விருந்தினர் விடுதியில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அதேவேளை சந்தோஷ் நாராயணனின் மனைவி யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியை சேர்ந்தவர் என்பதும் , அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் சந்தோஷ் நாராயணன் பெரியளவிலான இசை நிகழ்வொன்றினை நடாத்த திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  

Related posts

பரீட்சை திகதி – இந்நாட்களில் அறிவிக்காதிருக்க தீர்மானம்

wpengine

ரயிலில் மோதி நபரொருவர் மரணம்

Azeem Kilabdeen

ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழுவின் விசேட கூட்டம் நாளை

wpengine