Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நான் ஓய்வில்தான் இருக்கிறேன், அரசியலில் இருந்து விலகவில்லை, மீண்டும் அரசியலுக்கு வருவேன்..!

என் மீள் அரசியல் பிரவேசம் சிலருக்குச் சவாலாக இருக்கக்கூடும் என்பதால் பல்வேறு விதமான வதந்திகள் தற்போது வெளியாகின்றன என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நான் மீண்டும் அரசியலுக்கு வருவேனா? இல்லையா? என்பது தொடர்பில் இப்போதைக்குப் பதில் கூற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வரவுள்ளார் எனவும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் வேட்பாளராகக் களமிறங்கவுள்ளார் எனவும் செய்திகள் வெளிவந்திருந்தன.

இது தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் தெரிவிக்கையில், என் மீள் அரசியல் பயணத்தைப் பற்றி நான் தான் முடிவெடுக்க முடியும். அதில் வேறு எவரும் தலையிட முடியாது.

நான் நாட்டை விட்டு ஓடவில்லை அரசியலுக்குப் பிரியாவிடை வழங்கவும் இல்லை. தற்போது ஓய்வில் தான் இருக்கின்றேன்.

நாட்டில் நடக்கும் விடயங்களை நாள்தோறும் அவதானித்து வருகின்றேன் என  தெரிவித்துள்ளார். 

Related posts

அரை சொகுசு பஸ்களுக்கு ஆகஸ்ட் கடுமையான புதிய சட்டங்கள்.

wpengine

அமைச்சர்களின் வாகன கொள்வனவுக்காக 79 கோடி ஒதுக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு..

wpengine

மதுபான அனுமதிப்பத்திரம் குறித்து ரணில் அறிக்கை!

wpengine