Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

செனல் 4 வெளியிட்ட காணொளிகளில் நம்பகத்தன்மை இருக்குமானால் அதை எதற்காக நீக்க வேண்டும்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ராஜபக்ஷேக்களுடன் செனல் 4 இற்கு 2009 ஆம் ஆண்டு யுத்த முடிவிலிருந்து வரலாற்று ரீதியிலான பகை இருப்பதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் செனல் 4 வெளியிட்ட காணொளிகளில் நம்பகத்தன்மை இருக்குமானால் அதை எதற்காக அவர்கள் தமது இணையத்தளத்திலிருந்து நீக்க வேண்டுமென இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழித்ததற்காக ராஜபக்ஷேக்களைப் பழி வாங்குவதற்கான இன்னுமொரு முயற்சியாக இது இருக்கலாம், அல்லது சிலரின் அரசியல் நோக்கங்களைத் திருப்திப்படுத்துவதற்காக செனல் 4 புதிய வீடியோவை வெளியிட்டு இருக்கலாம் என நாமல் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு யுத்த முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின் எனது குடும்பத்துடனும் எனது தந்தை மற்றும் ராஜபக்ஷ என்ற பெயருடனும் செனல் 4 வரலாற்றுப் பகையைக் கொண்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படக் கூடாது, அது அரசியல் மயமாக்கப்படுவது சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்குத் தடையாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

சீமெந்தின் விலை 300 ரூபாவால் குறைப்பு..!

wpengine

நாடளாவிய ரீதியில் சமூர்த்தி வங்கி ஊழியர்கள் நாளை(16) பணிப்புறக்கணிப்பில்..

wpengine

மாடறுப்பு தடை : சட்ட திருத்தத்திற்கு அனுமதி

wpengine