Top Story 3உலக செய்திகள்சூடான செய்திகள்

டொனால்ட் டிரம்ப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜோர்ஜியா தேர்தல் முறைகேடு சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு ஃபுல்டன் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சுமார் 20 நிமிடங்கள் சிறையில் இருந்துள்ளார்.

சக குற்றவாளிகளையோ சாட்சிகளையோ மிரட்டுவதற்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட பிற நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்ட பின்னரே அவர் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிறையில் இருந்து விடுதலையான பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், தான் எந்த தவறும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

Related posts

ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அதிகார பூர்வமாக அறிவித்தார் ட்ரம்ப்…

wpengine

தெற்காசியாவின் மிகப்பெரும் கோடீஸ்வரராக மாறிய மகிந்த ராஜபக்ச!

wpengine

உயர்தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று முதல் தடை

wpengine