Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கடும் வறட்சி – சுமார் 100,000 பேர் பாதிப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் வறட்சியினால் ஒன்பது மாவட்டங்களில் சுமார் 100,000 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, இரத்தினபுரி, பதுளை, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் 30,862 குடும்பங்களைச் சேர்ந்த 99,594 பேர் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் 69,000 இற்கும் மேற்பட்ட நபர்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் சங்கானைப் பிரதேசம் ஜூன் மாதத்திற்குப் பிறகு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை போதிய மழைவீழ்ச்சி பதிவாகாது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு

Azeem Kilabdeen

முதல் போட்டி குறித்து அணியில் மாற்றம்… – மாலிங்க குறித்து மேத்யூஸ் ஊடக அறிவிப்பு

wpengine

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் கூட்டு எதிர்க்கட்சியில் இணைவு…

wpengine