Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல்!

2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் அவர் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

விரைவில் மொட்டுடன் சந்திப்பு

இதுதொடர்பில் , விரைவில் மொட்டுக் கட்சியினருடனும் சந்திப்பு நடத்தவுள்ளார் எனவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்தில் அதில் அரசுக்குப் பின்னடைவு ஏற்பட்டால் அது ஜனாதிபதித் தேர்தல் முடிவில் தாக்கம் செலுத்தும் என்பதாலேயே ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்றதன் பின்னரே மாகாண சபைத் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பன இடம்பெறும்.

Related posts

வாக்காளர்கள் கவனத்திற்கு

wpengine

செல்லுபடியாகும் தபால் மூல வாக்காளர்கள் 560,000…

wpengine

மண்சரிவால் ஸ்தம்பிதமடைந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு…

wpengine