Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்றத்தின் ஜாம் போத்தலையும், ரின் பாலையும் திருடியவர் கைது..!

நாடாளுமன்றத்தில் திருடிய குற்றச்சாட்டின் கீழ் அங்கு சமையல்காரனாக பணியாற்றும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த கைது சம்பவம் இன்று(08) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

சந்தேக நபரான சமையல்காரர் தனது பணியை முடித்து, ​​நாடாளுமன்ற பிரதான நுழைவாயிலில் சென்றபோது அவர் வைத்திருந்த பையை காவல்துறையினர் சோதனை செய்தனர்.

இதன்போது நாடாளுமன்றத்தின் சமையலறையில் இருந்து ஜாம் போத்தல் மற்றும் ரின் பால் குவளை என்பன திருடப்பட்டு எடுத்துச் செல்லப்படுவது தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக வெலிக்கடை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related posts

களுத்துறையின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுலில்

wpengine

காணாமற்போனோர் செயலகத்தின் செயலாளர் பதவி மனோ தித்தவுக்கு..

wpengine

எரிபொருட்களின் விலைகளில் இம்மாதம் மாற்றங்கள் ஏற்படாது

wpengine