Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

‘நீர் கட்டண அதிகரிப்பால் உணவுப் பொருட்களை கழுவுவதையும் குறைக்க வேண்டிய நிலை’

உணவகம் ஒன்றிற்குச் சென்றால் குடிக்கும் ஒரு கிளாஸ் தண்ணீருக்கும் கட்டணம் வசூலிக்க வேண்டிய சூழ்நிலையை அரசு உருவாக்கி இருப்பதாக உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அசேல சம்பத் தெரிவித்திருந்தார்.

கொழும்பில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

குடிநீர் கட்டணம் அதிகரித்து வருவதால் உணவகங்களை நடத்துவதில் பல சிக்கல்கள் ஏற்படுவதாக அவர் மேலும் தெரிவிக்கிறார்.

உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் கைகளை கழுவவும், தண்ணீர் குடிக்கவும், கழிவறையை பயன்படுத்தவும், உணவு கழுவுதல் மற்றும் சமைப்பது மட்டுமின்றி, ஊழியர்களின் தேவைக்காகவும் தண்ணீர் பயன்படுத்தப்படுவதாக தலைவர் கூறுகிறார்.

இதனால், உணவுப் பொருட்களை கழுவுவதை குறைக்க வேண்டும், வாடிக்கையாளர் பயன்படுத்தும் தண்ணீர் கோப்பைக்கு கூட கட்டணம் வசூலிக்க வேண்டும், உணவகங்களில் உள்ள கழிவறைகளை கூட மூட வேண்டிய நிலை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.

அவர் கூறுகையில், உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலை அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

Related posts

அதிக விலையுடைய மருந்து வகைகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை…

wpengine

ரணில் ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் ஐ.ம.சக்தி பிரதிநிதிகள்!

Azeem Kilabdeen

இஸ்ரேல் – பலஸ்தீன விவகாரம்: போர் நிறுத்தத்தை வலியுறுத்தி கொழும்பில் அமைதி மாநாடு – அடை மழைக்கு மத்தியில் ஒன்றுகூடி ஆதரவை வெளிப்படுத்திய மக்கள்..!

wpengine