Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உலக வங்கியிடம் 200 மில்லியன் டொலர்களை மானியமாகப் பெற திட்டம் போட்டுள்ள அரசாங்கம்..!

உலக வங்கியுடன் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாகப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு சிறந்த இலக்கு வருமானம் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதற்கும் சமூக பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துவதற்கும் ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உலக வங்கியுடன் கலந்துரையாடல்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு மே மாதம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் கடன் மானியத்தைப் பெறுவதற்காக உலக வங்கி குழுவின் சர்வதேச அபிவிருத்தி தீர்ப்பாயத்துடன் தொடர்புடைய உடன்படிக்கையை மேற்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

துப்பாகிச்சூட்டுக்கு இலக்கான யாழ்.பல்கலை மாணவர்களுக்கு நீதிவேண்டி ஹர்த்தால்..

wpengine

அதிக வெப்பம் கொண்ட காலநிலை – கொழும்பு தேசிய வைத்தியசாலை பொது மக்களிடம் அவசர வேண்டுகோள்..

wpengine

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிப் பொதுச் செயலாளர் மற்றும் பிரதமர் இடையில் சந்திப்பு…

wpengine