Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கிழக்கு கடற்கரையில் இருந்து தெற்கு கடற்கரைக்கு பரவிய விஷ மீன் இனம்; மருத்துவரின் எச்சரிக்கை..!

கிழக்கு கடற்கரையில் இருந்த ‘லோடியா’ என்ற மீன் இனம் தெற்கு கடற்கரையிலும் பரவியுள்ளதாக தேசிய விஷ தகவல் மையம் அறிவித்துள்ளது.

இந்த உயிரினம் மனித உடலில் உரசினால் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இதனை அதன் பிரதானி வைத்திய நிபுணர் கலாநிதி ரவி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

வைத்தியரின் எச்சரிக்கை

ஜூலை மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை இந்த மீன் இனத்தை கடலில் காணமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மீன் ஒரு சிறிய பலூனைப் போலவும் வயிற்றில் நீளமான நுாலை போன்ற சுரப்பிகளைக் கொண்டிருப்பதாகவும் மருத்துவர் குறிப்பட்டுள்ளார்.

இந்த மீனை தொடுவதன் மூலம் ஒரு நபர் ஒவ்வாமையிலிருந்து அதிர்ச்சி நிலைக்குச் செல்லலாம் இதன் மூலம் நரம்பு மண்டலம் இதயம் மற்றும் சுவாச மண்டலம் பாதிக்கப்படலாம் எனவும் மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

மேலும் சில குற்றவாளிகளுக்கு பிணை

wpengine

புதினுக்கு ஐ.எஸ் அமைப்பு எச்சரிக்கை

wpengine

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நீடிப்பு…

wpengine