Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறங்கியே தீருவார்”

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறங்கியே தீருவார்” என அமைச்சர் காஞ்சன விஜேயசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த விடயத்தில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ரணில் மொட்டுக் கட்சி சார்பாகவா அல்லது பொது வேட்பாளராகவா போட்டியிடுவார் என்பதை ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளிவந்த பின்னர்தான் அறியத்தருவோம்.

நாட்டிலுள்ள தற்போதைய அரசியல் தலைவர்களில் நாட்டுக்குத் தலைமை தாங்கக் கூடிய சிறந்த தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே.

இதை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பறைசாற்றிக் காட்டும்” என தெரிவித்துள்ளார்.

Related posts

புர்கா ஆடைக்குத் தடையில்லை.. – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு..

wpengine

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைமைக்கு மீண்டும் யூ.ஆர்.டி.சில்வா

wpengine

அர்ஜுன மகேந்திரனுக்கு பிணைமுறி குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழு அறிவித்தல்..

wpengine