Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாட்டில் எயிட்ஸ் நோயாளர்களின் அதிகரிப்புக்கு, ஆணுறைகளின் மீது குற்றச்சாட்டு..!

நாட்டில் ஆணுறைகளின் சீரற்ற பயன்பாடு உள்ளிட்ட காரணங்களினால் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்துள்ளதாக தேசிய சுகாதார சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு வருடத்திற்குள் 620 புதிய நோயாளர்கள் மற்றும் 81 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய சுகாதார சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆணுறைகளின் சீரற்ற பயன்பாடு இதற்கு பிரதான காரணம் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பதிவான ஒட்டுமொத்த தொற்றுக்களுடன் ஒப்பிடும்போது, இந்த வருட முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச் வரை) 13 சதவீத அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

மேலும், எண்ணிக்கையில் எச்ஐவி, எயிட்ஸ் தொற்றுக்கள் 4,556 இலிருந்து 5,176 ஆக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில், 165 புதிய நோயாளர்கள் மற்றும் 15 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

எனினும் 2022 ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 1,520 எயிட்ஸ் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களின் தலைமை பதவிகள் எதிர்க்கட்சிக்கு வழங்க பரிந்துரை

wpengine

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

wpengine

19 ஆவது திருத்தச் சட்டம் – கலந்துரையாடத் தயார்

wpengine