உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  \
நிலவும் மோசமான காலநிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதன்படி, கேகாலை மாவட்டத்தில் தெஹிம்பிவிட்ட மற்றும் தெரணியகல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, கேகாலை மாவட்டத்தின் யட்டியந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் அலபத, நிவித்திகல, கலவான, எஹெலியகொட மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கும் அம்பர் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலகம், கிரியெல்ல, அயகம, குருவிட்ட மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மதுல்ல ஆகிய பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைக்கத் தீர்மானம்

wpengine

வறட்சியினால் வடக்கில் 99,191 பேர் பாதிப்பு…

wpengine

கொழும்பு – மாத்தறை பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

wpengine