Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

யாழில் வெள்ளி – ஞாயிறுகளில் தனியார் வகுப்புக்களை நிறுத்த தீர்மானம்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
ஜூலை முதலாம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில், தரம் ஒன்பதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு, வெள்ளிக்கிழமை பாடசாலை நிறைவடைந்த பின்னரும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும், தனியார் வகுப்புக்கள் நடத்தப்படுவதை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரனின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக, வாரத்தில் ஏழு நாட்களும் ஓய்வின்றிக் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுவதனால், மாணவர்களுக்கும், சமுதாயத்திற்கும் ஏற்படும் சாதக மற்றும் பாதக விளைவுகளை கருத்தில்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

Related posts

ஜெருசலம் குறித்த அமெரிக்காவின் யோசனை தோல்வியடைந்தது..

wpengine

சகலதுறை ஆட்டக்காரர்களின் படுபோக்கே தோல்விக்கான காரணம் – சந்திமால்

wpengine

இந்தியாவிடமிருந்து வாங்கக் கூடாது – ஜனாதிபதி

wpengine